இவளுக்கு இன்னொரு முகம் (நூல்)
இவளுக்கு இன்னொரு முகம் | |
---|---|
நூல் பெயர்: | இவளுக்கு இன்னொரு முகம் |
ஆசிரியர்(கள்): | சேலம் ஆறுமுகன் |
வகை: | கதை |
துறை: | புதினம் |
இடம்: | பத்மினி பதிப்பகம், 144, வி.எம்.ஆர்.நகர், மெய்யனூர், சேலம் -636 004. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 136 |
பதிப்பகர்: | பத்மினி பதிப்பகம் |
பதிப்பு: | நவம்பர் ’ 2008 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
இந்த “இவளுக்கு இன்னொரு முகம்” எனும் கதை நூல் 136 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்
[தொகு]நூலாசிரியர் சேலம் ஆறுமுகன் சிறந்த படைப்பாளர். இவரது மூன்று படைப்புகள் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர்களால் ஆய்வு செய்யப்பட்டு "ஆய்வியல் நிறைஞர்" (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் "கலை முதுமணி" பட்டம் , ஈரோடு தமிழ்ச்சங்கம் வழங்கிய "தனித்தமிழ் பாவலர்" பட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். இவருடைய "பறவைக்குச் சிறகேது" எனும் நூல் நாகப்பன் இராஜம்மாள் இலக்கிய விருதும் பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அணிந்துரை
[தொகு]இந்நூலுக்கு இனமானக் கவிஞர் அரிமா அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
பொருளடக்கம்
[தொகு]வயதான காலத்தில் பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அடையும் துயரம் கொடுமையானது. அந்தக் கொடுமையில் இருக்கும் பெரிய பண்ணாடியான வேலப்ப பண்ணையார் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கிறார் என்பதைச் சொல்கிறது இந்தக்கதை.